கெல்லப்பிட்டியில் ஆரம்பமானது மே தின பேரணி

கொழும்பு,மே 01

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கெம்பல்பிட்டியில் ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஆரம்பமான இந்த பேரணி பொரளை ஊடாக கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொரளை, வோட் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னிலை சோசலிச கட்சியின் மே தின பேரணி கொழும்பு – விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

Leave a Reply