வரலாற்றில் பாரியளவிலான கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே! திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டின் வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மேதின பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர்,

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ச்சியாக கோஷமிட்டுவரும் நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் போராட்டங்கள் பலனளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதனை அடுத்து சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

Leave a Reply