பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் யாழ். நல்லூர் கோயிலுக்கு விஜயம்!

<!–

பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் யாழ். நல்லூர் கோயிலுக்கு விஜயம்! – Athavan News

யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை விஜயம் செய்த பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நல்லூர் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார்.

அதன்படி, இன்று காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற அவரை, யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர்  வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்வில் யாழிற்கான இந்தியத் துணைத்  தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply