யாழில் 490 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 490 கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்ற கஞ்சாவே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது, குருநகரை் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட இடைவெளியின் பின்பு அதிகளவான கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளதோடு, இதன் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply