இலங்கையை லெபனானாக மாற்றி விட்டார்கள்: சஜித்

கொழும்பு, மே 04

நாட்டை வெனிசுலாஃலெபனானாக மாற்றிவிட்டீர்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாரைாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சஜித் மேலும் கூறியதாவது,

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை இலங்கையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தகைய மாநாட்டை முழுத் திறனுடன் ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. அதேவேளை நீங்கள் ஏன் ஐநா அமைப்புகளுடனும், உலக வங்கி நிறுவனங்களுடனும் பேசி திருடப்பட்ட டொலர்களை இலங்கைக்கு கொண்டு வரக்கூடாது?’ என அரசாங்கத்தை நோக்கி கேள்வியெழுப்பினார். 

இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. மக்களின் குரலுக்கு செவிசாய்த்து பதவி விலகுங்கள்.  பண்டோரா மற்றும் ஏனைய இடங்களில் வைப்புச் செய்யப்பட்டுள்ள டொலர்களை நாட்டுக்கு கொண்டு வந்தால் நாட்டில் மீண்டும் டொலர்கள் கிடைக்கும்.

நிதியமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் தவறுகளை ஏற்றுக்கொண்டமையை வரவேற்ற சஜித் பிரேமதாச, அமைச்சரவையில் இருந்துக்கொண்டு அமைச்சரவையில் இடம்பெற்ற தவறுகளை ஏன் தட்டிக்கேட்கவில்லை.

வறுமை ஒழிப்பு திட்டத்தை விமர்ச்சிக்கவேண்டாம், இந்த திட்டங்களை நடப்பு அரசாங்கமே அரசியலுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தினார்.  அரச சேவையாளர்களுக்கு வழங்கப்பட்ட வேதன உயர்வு பிழையானது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டதை கண்டித்த அவர், அதன் காரணமாக நாட்டில் நிதி பிரச்சினை ஏற்படவில்லை என்றார்.

Leave a Reply