இந்தியா செல்ல முயன்ற திருகோணமலையைச் சேர்ந்த 12 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது!

மன்னார் கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 பேர் தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று(புதன்கிழமை) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்களாக 3 குடும்பங்களின் உறுப்பினர்களும், மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று காலை 5 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply