நாட்டில் அம்பியூலன்ஸ் சேவைக்கு ஏற்பட்ட நிலை!!!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கடந்த 2018ம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

5 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் 1990 சுவ செரிய, இலவச அம்பியூலன்ஸ் சேவையின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நிதியை ஒதுக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா அவசர நோயாளர் காவு வண்டி சேவையை நடத்துவதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்குமாறு வலியுறுத்தி தனிப்பட்ட முறையீடு ஒன்றை விடுத்தார்.

1990 சுவா செரிய அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயற்படுவதற்கு நிதி இல்லாமல் போனதாக அவர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply