யாழ். நவாலியில் பெருமளவு கசிப்புடன் சந்தேகநபர் கைது!

மானிப்பாய் – நவாலி பகுதியில் வைத்து 185 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றுடன் ஆனைக்கோட்டையை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply