இன்று காலை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் தற்போது மஹரகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி பொதுமக்கள் மஹரகம பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் தற்போது பொலீஸ் நிலையத்திற்கு வருகை தந்து சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுகின்றனர்.






