“கோட்டா – மைனா கோ கம”வில் அரசுக்கு எதிரான தொடரும் போராட்டங்கள்!

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் “கோட்டா கோ கம“ ஆர்ப்பாட்டக்களத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 27ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியான உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேநேரம், நீதிமன்ற உத்தரவையடுத்து, அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ‘மைனாகோகம’ ஆர்ப்பாட்டக்களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளும் பொலிஸ் ட்ரக் வாகனங்களும் நேற்று அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply