‘ஹொரு கோ கம’ பாராளுமன்ற வளாகத்தில் முளைத்த மற்றொரு கிராமம்

பாராளுமன்ற வளாகத்தில் தற்போது ‘ஹொரு கோ கம’ என்ற பெயரிலான மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியிருந்தனர்.

மேலும், நேற்றிரவு முதல் பாராளுமன்ற வளாகத்தை அண்மித்த வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகளுடனான வேலிகளை மாணவர்கள் உடைத்தெறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், பாராளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply