லங்கா சதொச நிறுவனத்துக்குரிய 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதி உதவி செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் தெரிவித்துள்ளார்.
மேலும், பேலியகொடை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளமையுடன், தகவல்களை மறைத்தல், சட்டவிரோதமாகப் பொருள்களை விடுவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.




