தொடரும் போராட்டம்: காலிமுகத்திடலில் இராணுவத்தினர் குவிப்பு!

காலிமுகத்திடலில் தற்போது இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரையில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் வேண்டுமென்றே போராட்டக்காரர்களை உள்ளே செல்ல அனுமதித்ததாக அனைத்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply