நாளை பாராளுமன்றில் கட்சித்தலைவர்களின் நேரடி கூட்டம்

கொழும்பு, மே 11

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நிகழ்நிலையூடாக  கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.

பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாளை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Leave a Reply