நான் சுதந்திரமாக இருக்க முடிவு செய்துள்ளேன்! கட்சியை விட்டு விலகினார் ஹரின் பெர்னாண்டோ

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ எம்.பி விலகியுள்ளார்.

இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை எங்களால் தாமதப்படுத்த முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி இதைத் தாமதப்படுத்தினால், நான் சுதந்திரமாக இருக்க முடிவு செய்துள்ளேன்.

மேலும் அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல.

இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும் என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறினார்

Leave a Reply