பிரதமர் ரணில் இந்தியாவுக்கு விஜயம்!

மகிந்த ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து புதிய பிரதமராக ஜனாதிபதியால் நேற்று மாலை நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள் புதுடில்லிக்கு செல்லும் பிரதமர் அங்கு அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இலங்கை தற்போது எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply