மொட்டுக் கட்சியின் , நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, விஜயதாச ராஜபக்ச ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவி ஏற்ற பின்னர், அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர்களில் குறித்த மூவரும் அமைச்சு பதவிகளை ஏற்க மறுத்துள்ளனர்.
மேலும் நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் சபை முதல்வர் பதவியை ஏற்க முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் தினேஷ் குணவர்தன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் சபை முதல்வராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





