இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

இரத்தினபுரியின் களுகங்கை சிறியளவிலான வெள்ள நிலைமையை அடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் பதிவான அதிக அளவான மழை வீழ்ச்சி காரணமாக இவ்வாறு களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், களுகங்கையை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், களுகங்கையின் இரண்டு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதி மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply