நாட்டு மக்களுக்கு ரணிலின் உறுதி

கொழும்பு,மே 13

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது துன்பத்தையும் அமைதியின்மையையும் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போதைய நெருக்கடி நிலைமை “மோசமடைவதற்கு முன் சரியாகிவிடும்” என கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிதி உதவிக்காக உலகின் பல நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply