பாரிஸில் உள்ள துருக்கி துணை தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்

பாரீஸ், மே 14

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள துருக்கி நாட்டின் துணை தூதரகத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். நள்ளிரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வெடிபொருட்கள், குண்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தூதரக கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தூதரக கட்டிடம் லேசாக சேதம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் மீதான தாக்குதல் முயற்சிகள் பிரான்சில் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply