நாடு மீண்டும் கள்வர்களின் கையில்..! மதுரங்குளியில் எதிர்ப்பு போராட்டம்

ஜனாதிபதியை பதவி விலக கோரியும் , பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் இன்று மதுரங்குளி நகரில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“கோட்டா கோ ஹோம்”, ” நாடு மீண்டும் கள்வர்களின் கையில், மக்களுக்கு ஏமாற்றம் – போராட்டம் தொடரும்” இதுபோன்ற சில வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு , தலைகளில் கறுப்பு நிற பட்டி அணிந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு மதுரங்குளி நகரிலிருந்து பிரதேச சபை சபா மண்டபம் வரை நடந்து சென்றனர்.

புத்தளம் பிரதேச சபைத் தலைவர் ஆர்.பி.அஞ்சன சத்தருவான் தலைமையில் சபை நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டிருந்த போது, கோஷங்களை எழுப்பிய நிலையில் சபை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கொழும்பு முகத்திடல் அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் பிரதேச சபை உறுப்பினர் சிலர் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply