யாழ்ப்பாணம்,மே 15
யாழ்ப்பாணம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இனப்படுகொலை நினைவேந்தலின் நான்காம் நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வேலன் சுவாமிகள் கஞ்சி வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கிராம மக்கள், சிறுவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






