
கொழும்பு,மே 15
நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை மின்விநியோகத்தடை அமல்ப்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெசாக் போயா காரணமாக ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகத்தடை அமல்ப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது





