எஞ்சியுள்ள அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்?

எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை 18 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், 18 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் இதற்கு முன்னர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதற்கமைய 14 அமைச்சர்கள் இன்று பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply