போராட்டக்களத்தில் பொலிஸார் பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்கள்: விமல் வீரவன்ச

கொழும்பு,மே 17

அலரி மாளிகை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காலி முகத்திடல் போராட்டக்களத்துக்குச்  செல்ல அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியபோது அமைச்சின் செயலாளர் ஒருவரின் அறிவுறுத்தலை தொடர்ந்து சகல பொலிஸாரும் அமைதியாக ஒதுங்கியுள்ளனர்.

காலி முகத்திடல்  போராட்டக்களத்தில் பொலிஸார் பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற கூட்டத் தொடரின்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீதான தாக்குதல், நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலையும், அதனை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். அலரிமாளிகையில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின்போது மிலேச்சத்தனமான தாக்குதலுக்காக உத்வேகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply