அம்பாறையில் புரளி கிளப்பிய 7 பேரில் இருவர் கைது

அம்பாறை,மே 18

அம்பாறை நவகிரிய காட்டுப் பகுதியில் புலிகள் இயக்கத்தினர் தம்மைத் தாக்குவதாக கூச்சலிட்டு அப்பகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஏழு பேரில் இருவரை பக்கிஎல்ல பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

புலிகள் வெட்டுகிறார்கள் என சிலர் கூச்சலிடும் சத்தம் கேட்டு, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் பக்கியல்ல பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில், கிராம மக்கள் அச்சமடைந்து 119 பொலிஸ் பிரிவுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அம்பாறை மற்றும் அரந்தலாவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கிருந்த கொட்டில் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் என்பனவற்றைக் கண்ணுற்றுள்ளனர்.

இந்நிலையில், அங்கிருந்தவர்களில் தப்பிச் சென்ற நிலையில் அவர்களில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply