துமிந்த திஸாநாயக்கவின் கைத்துப்பாக்கியை காணவில்லையென முறைப்பாடு –

அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரால், அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது.

இதன்போதே குறித்த கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்கம் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைச் சம்பவங்களின் போது, அவரது வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply