சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை! – ரணில் தகவல்

கண்ணில்படுபவர்களை சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கண்ணில்படுபவர்களை எல்லாம் சுடுவதற்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

சில உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இருந்தபோதிலும் யாரையும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Leave a Reply