எரிபொருள் இறக்கும் பணிகள் இன்று இரவு ஆரம்பம்- எரிசக்தி அமைச்சர் கருத்து!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கு நேற்று இரவு பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை கப்பலில் இருந்து இறக்கப்படும் பெற்றோல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சென்றடைய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply