எரிவாயு வழங்கக் கோரி நடு வீதியில் டயர்களை எரித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு – புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மக்கள் கூறுகையில், எமக்கு ரணிலும் வேண்டாம், சஜித்தும் வேண்டாம்.

புதுக்கடை மக்கள் அனைவரும் கோட்டாகமவிற்கு செல்லவுள்ளோம். மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கிறார்கள்.

25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply