பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மா விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் விலையினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 450 கிராம் பாண் இராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply