நாடாளுமன்றத்துக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் ஆரம்பம்!

நாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் பொலிஸாரின் கோரிக்கைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.​

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் பொலிஸாரின் அதிகாரங்களுக்கு அமைய செயற்படுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply