சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட 8 பேருக்கு பிணை

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட 8 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முற்பட்ட வவுனியாவைச் சேர்ந்த 8 பேர் நேற்று அதிகாலை புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களை கருவலகஸ்வெவ பொலிஸார் இன்று புத்தளம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் அசேல சில்வா 8 பேருக்கும் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த வழக்கு 2023 ஆண்டு தை மாதம் 5ம் திகதி வரை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக நீதவான் அசேல சில்வா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply