அரச அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம்- விசேட அறிவிப்பு வெளியாகியது!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் க.பொ.த (சா/த) பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் குறிப்பிட்ட கடமையில் ஈடுபடும் அரசாங்க அலுவலர்கள் குறித்த நேரத்தில் கடமை நிலையங்களுக்கு வருகை தர வேண்டியுள்ளது.

எனவே பரீட்சை கடமைகளுக்காக தனிப்பட்ட மற்றும் அரச மோட்டார் சைக்கிள் உட்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் அலுவலர்களுக்கு தடையில்லாமல் எரிபொருள் வழங்க வேண்டியுள்ளது.

எனவே பரீட்சை கடமைக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) பி.ப 3.00 மணி தொடக்கம் பி.ப 5.00 மணி வரை தங்களது நியமனக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை காண்பித்து தமக்கு அருகில் உள்ள எரிபொருள் நிலையத்தில் தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply