ஹரின் – மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்?

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளைப் பெற்றுக் கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்டமைக்காக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல முதலில் தெரிவித்திருந்தார்.

அரசுடன் இணைவது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணியின் கொள்கைக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசில் இணைய ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்தபோதிலும் அதனை நிராகரித்த நிலையில் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினரகளும் அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply