ஜெனீவா பகிரங்க டென்னிஸ்: ஜோவா சோசா- காஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ஜெனீவா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், ஜோவா சோசா மற்றும் காஸ்பர் ரூட் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

முதலாவது அரையிறுதிப் போட்டியில், போர்த்துகலின் ஜோவா சோசா, பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கெட்டை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஜோவா சோசா, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நோர்வேயின் காஸ்பர் ரூட்டும், அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், காஸ்பர் ரூட், 7(7)-6(2), 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

Leave a Reply