கடந்த 9ஆம்…

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நேற்றைய தினம் 3 மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் வாக்குமூலம் பெற்றனர்.நேற்று பிற்பகல் 4 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த அவர், இரவு 7.30 அளவில் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பல தரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.குறித்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், தலைவர் உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் ஹோகந்தர பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.எதுல் கோட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் இதுவரையில் பெண் ஒருவர் உட்பட 16 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply