பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம்! – கல்வி அமைச்சின் அறிவிப்பு

தற்போது நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த கல்வி முறை மாற்றியமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, விரைவில் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கான அனுமதிக் கடிதம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply