யாழ்ப்பாணம்,மே 21
யாழ்ப்பாணத்தில் உள்ள லிங்கன் ஐஸ்கிரீம் கடையின் மேல் மாடியில் தீ பரவல் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் உடனடியாக யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும், தீப் பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியமுடியவில்லை.








