யாழில் எரிபொருளை பதுக்கி விற்பனை செய்த ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – கொடிக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடத்தற்பளையில் உள்ள வீடு ஒன்றில் டீசல் மற்றும் பெற்றோலை பதுக்கி விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான ஒருவரே கொடிகாமம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 280 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply