நாட்டில் 15மணி நேர மின் தடை-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்தடை அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் மின்சாரத்தை மையமாக வைத்து இயங்கும் பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் நாட்டில் 15 மணி நேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என அரசியல்வாதிகளினால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துகளை வெளியிடுகின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு வேளைகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply