இந்திய மக்களுக்கு நன்றி -ரணில் ருவிட்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையை வந்தடைந்தது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

இலங்கைக்கு இன்று இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட ரூ.2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply