எரிபொருள் தட்டுப்பாடு;காரை- ஊர்காவற்றுறை பாதைச் சேவை ஸ்தம்பிதம்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில், காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாக பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயை தேவைக்கேற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்கு சீரான சேவையை வழங்கவேண்டும். அதை விடுத்து, கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply