கடல் வழியாக வெளியேற முற்பட்ட மேலும் சிலர் கைது!

நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக வெளியேற முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது திருகோணமலை சல்லி சாம்பல்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சிறுவர்கள் மூவர், 7 பெண்கள் உள்ளடங்கலாக 67 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply