நாட்டின் நெருக்கடி நிலையை தீர்க்க தேர்தலே ஒரே வழி- அனுர ஆலோசனை!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு தேர்தலே என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை மக்களின் கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர் என சுட்டிக்காட்டிய அவர். எரிவாயு , பால்மா , எரிபொருள் , உரம் போன்றவற்றை மக்கள் கோரிய போது ஜனாதிபதியோ ,அமைச்சர்களோ அதற்கு செவிசாய்க்கத் தவறியதனால் மக்கள் தொடர்ந்தும் கோருவதில் பயனில்லை என தீர்மானித்தனர் என அவர் தெரிவித்துள்ளார் .

இதன் காரணமாகவே கோட்டபாய ராஜபக்சவை வீடு செல்லுமாறு மக்கள் கோரிய தாகவும் அந்த வீட்டில் ரணில் வந்து அமருவதை மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

Leave a Reply