எமக்கு இலவசமாக எதுவும் வேண்டாம்-யாழ் விவசாயிகள் கோரிக்கை! (வீடியோ இணைப்பு)

அரசிடம் இலவசமாக விவசாய உள்ளீடுகளை தருமாறு நாம் கேட்கவில்லை. நியாமான விலையில் அதனை பெற்றுத் தருமாறே கேட்கின்றோம் என யாழ் மாவட்ட விவசாய அமைப்பு அதிகார சபையின் தலைவர் தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டா அரசு இராசயன உரங்களுக்கு தடை விதித்தலால் இம்முறை அறுவடை பாதியாக குறைவடைந்துள்ளது.இம்முறை விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரம் விவசாய குடும்பங்களும்,20 ஆயிரம் விவசாய கூலிகளும் உள்ளனர்.அவர்களின் நிலை என்ன?.இப்பொது சிறுபோக விவசாய காலம்.50 வீதமான விவசாயிகள் சிறுபோக விவசாயத்திற்கு தயாராக இல்லை.

ஏனென்றால் மூலப் பொருட்கள் இல்லை.யூரியா 40 ஆயிரம் ரூபா .இது தவிர சில நோய்த்தாக்க மருந்துகள் 10 மடங்கு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு செலவழித்து நாம் உற்பத்தி செய்தாலும் அதற்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதில்லை.

இன்றைய பொருட்களின் விலை அதிகரிப்பில் எவ்வாறு குடும்பம் நடாத்துவது.டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பால் தம்புள்ளை வியாபார நிலையத்துக்கு கொண்டு செல்ல 5 மடங்கு செலவு ஏற்படுகிறது.

40 ஆயிரம் ரூபாவுக்கு குவிக்கப்பட்ட எரு இன்று 70 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது,நாம் அரசிடம் இலவசமாக எதையும் கேட்கவில்லை.நியாயமான விலையில் ,தட்டுப்பாடின்றி உரங்களையும் மருந்து வகைகளையும் பெற்றுத் தருமாறே கோருகின்றோம் என்றார்.

வீடியோ இணைப்பு

Leave a Reply