தொடரும் நெருக்கடி நிலை; உணவுப் பொதியும் விலையும் உச்சம்!

நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றது.

இந்நிலையில் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவகங்களின் என்கிற ஒன்றே இலங்கையில் முற்றாக இல்லாதொழியும் நிலைக்கு அரசாங்கம் உணவகங்களை தள்ளியுள்ளதாகவும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் உணவக உரிமையாளர்கள் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply