எனது தந்தை இலங்கையை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மாலைத்தீவுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு மறுப்பு வெளியிடும் வகையில் அவர் குறித்த பதிவினை இட்டுள்ளார்.
மாலைத்தீவு ஊடகம் ஒன்றின் செய்தியை மேற்கோள்காட்டி அவர் இதனைக் கூறியுள்ளார்.
மாலைத்தீவில் வில்லா வாங்குவதில் தனது தந்தை கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




