சனத் நிஷாந்த, ஜயதிலக்க நீதிமன்றில் ஆஜர்!

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு அமைய அவர்கள் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply