தனிப்பட்ட உறவு குறித்து முரண்பாடு; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகொலை!

வனாத்தவில்லு – மங்களப்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட உறவு குறித்து ஏற்பட்ட முரண்பாடொன்றின் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply